தமிழ்நாடு

tamil nadu

நீதி கிடைக்க மருத்துவர்களே பங்கு வகிக்கிறார்கள்: எஸ்.பி. அருண்சக்திகுமார்

By

Published : Feb 27, 2020, 12:10 PM IST

புதுக்கோட்டை:மருத்துவர்களே பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சரியான நீதி கிடைக்க பெரும் பங்கு வகிக்கிறார்கள் மாவட்ட எஸ்.பி அருண்சக்திகுமார் கூறியுள்ளார்.

போலீஸ்
போலீஸ்

புதுக்கோட்டை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் சார்பாக சட்ட மருத்துவ கருத்தரங்கம் மருத்துவத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.இதற்கு மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ம.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். இதில் தலைமை விருந்தினராக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், “மருத்துவர்களே பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சரியான நீதி கிடைக்க பெரும் பங்கு வகிக்கிறார்கள். சந்தேகமான மரணங்கள், காயங்கள் போன்ற நேரங்களில் மருத்துவ பரிசோதனை மூலமாக சரியான காரணம் தெரியவருகிறது, அதற்கு மருத்துவர்களின் பங்கும் காவல் துறையின் பங்கும் முக்கியமானதாகும்.

மருத்துவர்கள் காயங்களுக்கு சிகிச்சை மற்றும் காரணங்களையும் தெரிவிப்பதன் மூலம் மக்களுக்கு நீதி விரைவிலும் ,சரியாகவும் கிடைக்கிறது.இறப்பிற்கான காரணத்தை கண்டுபிடிப்பதில் மருத்துவர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். காவல் துறை அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.

மருத்துவர்கள் கருத்தரங்கு

மேலும், டாக்டர் S. வள்ளியப்பன் MD, சட்ட மருத்துவ துறைத்தலைவர் அரசு மருத்துவக்கல்லூரி புதுக்கோட்டை விளக்க உரை ஆற்றினார். இதில் மருத்துவர்களுக்கு மருத்துவம் மற்றும் சட்டம் சார்ந்த பல விளக்கங்களை எடுத்துக்கூறினார்.இணை இயக்குநர், மருத்துவர்கள் விரைவாகவும்,தெளிவாகவும் மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும்,காவல் துறைக்கு சட்டம் சார்ந்த பணிகளில் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கூறினார். முடிவில் மருத்துவர்களின் சந்தேகங்களுக்கான கலந்துரையாடல் நடைபெற்றது.

இதையும் படிங்க: ஜப்பான் சொகுசுக் கப்பல்: 119 இந்தியர்களுடன் டெல்லி வந்திறங்கியது மீட்பு விமானம்

ABOUT THE AUTHOR

...view details