தமிழ்நாடு

tamil nadu

புதுக்கோட்டையில் ரே.. ரே... ரேக்ளா ரேஸ்..!

By

Published : Mar 31, 2022, 6:44 PM IST

ரே ரே ரேக்ளா ரேஸ்

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்குடியில் வேண்டிவந்த அம்மன், முனீஸ்வரர் கணபதி கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை: அரிமளம் அருகே உள்ள பெருங்குடியில் வேண்டி வந்த அம்மன், முனிஸ்வரர் கணபதி கோயில் 38ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் இன்று (மார்ச் 31) காலை நடைபெற்றது.

இந்தப்போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டி பெரிய மாடு, கரிச்சான் மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது.

ரே ரே ரேக்ளா ரேஸ்

பெரிய மாடு பிரிவில் 9 ஜோடி மாட்டு வண்டிகளும் கரிச்சான் மாடு பிரிவில் 11 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. பெரிய மாடு போகவர 8 மைல் தூரமும்‌ கரிச்சான் மாடு போகவர 6 மைல் தூரமும் எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

பெரிய மாடு பிரிவில் நடைபெற்ற போட்டியில் 9 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்ற நிலையில் முதல் பரிசான 15,001 ரூபாயை தஞ்சாவூர் மாவட்டம் கீர்த்திக் நாட்டார் என்பவரது மாடும் இரண்டாவது பரிசான 12,001 ரூபாயை புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளூர்‌ தேவர் என்பவரது மாடும் மூன்றாவது பரிசான 10001 ரூபாயை புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஐய்யப்பன் என்பவரது மாடும், நான்காவது பரிசு 6,001 ரூபாயை புதுக்கோட்டை மாவட்டம் பொய்யாத நல்லூர் ஹபீப் முகமது என்பவரது மாடும் பெற்றது.

இதேபோல் கரிச்சான் மாடு பிரிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பந்தயத்தை சாலையில் இரு புறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

மேலும் சாலையில் துள்ளிக்குதித்து சீறிப்பாய்ந்த மாட்டுவண்டி ஜோடிகள் ஒன்றையொன்று முந்திச் சென்ற காட்சி பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தது.

இதையும் படிங்க:இந்தியாவின் சதுரங்க தலைநகரம் சென்னை.. அமைச்சர் மெய்யநாதன்

ABOUT THE AUTHOR

...view details