தமிழ்நாடு

tamil nadu

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் - இளைஞர் கைது

By

Published : Jan 26, 2020, 11:47 AM IST

புதுக்கோட்டை: முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பட்டதாரி இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இரண்டாம் திருமணம் செய்த பட்டதாரி இளைஞர் கைது
இரண்டாம் திருமணம் செய்த பட்டதாரி இளைஞர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் சிவநேசன் (34). இவர் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள வீராச்சிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை செய்கிறார்.

இவருக்கும், புதுக்கோட்டை அருகே உள்ள குளமங்கலம் தெற்கு கிராமத்தைச் சோ்ந்த மாசிலாமணி மகள் பிருந்தாதேவிக்கும் (28) கடந்த வாரம் திருமணம் நடந்தது. இதனைத் தொடா்ந்து, இருவரும் வீராச்சிப்பாளையத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், சிவனேசன் வீட்டிற்கு வராமல் ஈரோட்டிலேயே இருந்துள்ளார். இதனால் சிவநேசன் மீது சந்தேகமடைந்த பிருந்தாதேவி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடா்ந்து, பிருந்தாதேவியின் பெற்றோா் சிவநேசன் வேலைபாா்த்து வந்த நிறுவனத்திற்குச் சென்று விசாரித்தனர். அப்போது, சிவநேசன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் ஈரோட்டைச் சோ்ந்த மகாளி என்பவரது மகள் தங்கமணியை (26) காதல் திருமணம் செய்தது, அவா்களுக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை இருப்பது, சிவநேசன் வேலைபாா்த்துவரும் நிறுவனத்திற்கு அருகே வாடகைக்கு வீடு எடுத்து அவா்களைக் குடியமா்த்தி உள்ளது ஆகியவை தெரியவந்தது.

இதுகுறித்து பிருந்தாதேவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ஆலங்குடி மகளிா் காவல் துறையினர் சிவநேசனை கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க:இந்து முறைப்படி மீண்டும் திருமணம் - எல்லைகளைத் தாண்டிய காதல் கதை

ABOUT THE AUTHOR

...view details