தமிழ்நாடு

tamil nadu

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்!

By

Published : Feb 26, 2021, 7:03 PM IST

பருவத்தேர்வுக்கான கட்டணத்தை ஏற்கனவே செலுத்திய நிலையில், மீண்டும் பருவத்தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தச் சொல்வதாக கூறி புதுக்கோட்டை மன்னர் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து அக்கல்லூரியின் மாணவர்கள் இன்று (பிப்.26) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Pudukkottai mannar College
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் பயிலும் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்காம் பருவத் தேர்வுக்கான கட்டணத்தை ஏற்கனவே செலுத்திவிட்ட நிலையில், கல்லூரி நிர்வாகம் மீண்டும் கட்டணத்தை செலுத்தக்கூறுவதாகவும், அரியர் தேர்வுகளை மீண்டும் எழுதவேண்டும் என வலியுறுத்துவதாகவும் அக்கல்லூரி மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து இன்று (பிப்.26) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, மாணவர்களிடையே கல்லூரி பேராசிரியர்கள், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:1,754 சிறைவாசிகள் அடிப்படை எழுத்தறிவு திட்டத்தில் தேர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details