தமிழ்நாடு

tamil nadu

மனைவிக்குத் தெரியாமல் மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற நபருக்கு 37 ஆண்டுகள் சிறை

By

Published : Jun 14, 2022, 11:10 PM IST

புதுக்கோட்டையில் ஏற்கெனவே திருமணமானதை மறைத்து ஃபேஸ்புக் மூலமாக சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணிடம் பழகி பதிவுத் திருமணம் செய்து கொண்டு, பல லட்சம் ரூபாய் வரதட்சணையாக பெற்று மோசடியில் ஈடுபட்ட இளைஞருக்கு 37 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மனைவிக்கு தெரியாமல் மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற நபருக்கு 37 ஆண்டுகள் சிறை
மனைவிக்கு தெரியாமல் மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற நபருக்கு 37 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டைவசந்தபுரி நகரைச்சேர்ந்தவர் சோலை கணேசன் (வயசு 38). இவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வசித்து வருகிறார். சோலைகணேசனுக்கு ஃபேஸ்புக் சமூக வலைதளம் மூலம் சிங்கப்பூரை சேர்ந்த ஆரோக்கியமேரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை சோலை கணேசன் சிங்கப்பூருக்குச் சென்று கடந்த 2010ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தின்போது வரதட்சணையாக ரூ.72 லட்சத்து 85 ஆயிரத்தை ஆரோக்கியமேரியிடம் சோலை கணேசன் குடும்பத்தினர் பெற்றுள்ளனர். இந்த நிலையில் சோலை கணேசனுக்கு 17 வயது சிறுமியை திருமணமாக செய்து வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்து ஆரோக்கியமேரிக்கு தெரியவந்துள்ளது.

மேலும் சோலை கணேசனுக்கு ஏற்கெனவே திருமணமானதை மறைத்துவிட்டு தன்னை பதிவுத்திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சோலை கணேசன், அவரது தாய் ராஜம்மாள், சகோதரி கமல ஜோதி, சகோதரர் முருகேசன் ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா இன்று(ஜூன் 14) தீர்ப்பு வழங்கினார். இதில் ஏற்கனவே திருமணமானதை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு மோசடி செய்தற்கும் மூன்றாவதாக திருமணம் செய்ய முயன்றதற்கும் சோலை கணேசனுக்கு 37 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனையும், 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த சோலை கணேசனின் தாய் ராஜம்மாளுக்கு 15 வருடம் கடுங்காவல் தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும், சகோதரி கமலா ஜோதிக்கு 15 வருட சிறை தண்டனை, ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதமும், சகோதரர் முருகேசனுக்கு 16 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமும், அவரது பெரியப்பா நாராயணசாமிக்கு 19 வருட சிறைத்தண்டனை, ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:கும்பகோணம் அருகே காதல் திருமணம் முடிந்து ஐந்து நாட்களில் இளம் தம்பதி ஓட ஓட விரட்டி கொலை !

ABOUT THE AUTHOR

...view details