தமிழ்நாடு

tamil nadu

CCTV:தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடர்கள் கைது

By

Published : Jan 19, 2023, 5:43 PM IST

பெரம்பலூர் அருகே மேலப்புலியூர், நாவலூர் கிராமங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடர்களை சிசிடிவி உதவியுடன் கையும், களவுமாக ஊர் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

CCTV:தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடர்கள் கைது
CCTV:தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடர்கள் கைது

CCTV:தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடர்கள் கைது

பெரம்பலூர்:அருகே மேலப்புலியூர், நாவலூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 5 கோயில்களில் உண்டியல், கலசம் உள்ளிட்டவைகள் திருடு போனது. இதுகுறித்து பொதுமக்கள் காவல் துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நாவலூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரிநாள் அன்று விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

அதற்காக மைக் செட், ஸ்பீக்கர் உள்ளிட்டவை வைக்கப்பட்ட நிலையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்பீக்கர் போன்ற சில பொருட்கள் திருடு போனது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சிசிடிவி காட்சிகளை வைத்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அஜாக்கிரதையாகப் பதில் கூறி அனுப்பி உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிசிடிவி பதிவுகளை வைத்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட களரம்பட்டியைச் சேர்ந்த சந்துரு, நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய இரண்டு பேரை பொதுமக்களே பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் வாக்கு வாதம் செய்து,
தாங்கள் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் திருடர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வாசுதேவநல்லூர் அருகே முன்விரோதம் காரணமாக இரட்டைக் கொலை

ABOUT THE AUTHOR

...view details