தமிழ்நாடு

tamil nadu

புதுக்கோட்டை நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குநர்‌ வீடு உட்பட 6 இடங்களில் ரெய்டு

By

Published : Jul 26, 2022, 3:36 PM IST

நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குநர்‌ வீடு
நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குநர்‌ வீடு ()

புதுக்கோட்டை நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குநர் தன்ராஜ் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அரியலூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடக்கிறது.

அரியலூர்: புதுக்கோட்டை நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குநராக பணியாற்றுபவர் தன்ராஜ். இவர் கூடுதலாக தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நகர் ஊரமைப்புத்துறை இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு சொந்தமான வீடு அரியலூர் மாவட்டம் ஸ்டேட் பேங்க் பின்புறம் உள்ளது. இன்று காலை 8 மணி அளவில் அரியலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இவரது மகன் நடத்தி வரும் வாணி ஸ்கேன் சென்டரிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குநர்‌ வீடு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து இன்று திடீர் சோதனை நடத்தி வருவதாக தெரியவருகிறது. நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குநர் தன்ராஜ் சொந்தமான ஆறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.

அரியலூர் நகரில் ஸ்டேட் பேங்க் பின்புறம் உள்ள அவரது வீடு மற்றும் ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள அவரது மகன் நடத்தி வரும் வாணி ஸ்கேன் சென்டர். அரியலூர் புறவழிச் சாலையில் உள்ள வாணி மஹால் மற்றும் அவரது சொந்த கிராமமான பெரம்பலூர் மாவட்டம் கூத்தூரில் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 6 இடங்களில் சுமார் 36 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கடல்வழியாக வந்த போலாந்து நபர் கைது - சட்டவிரோதமாக நுழைந்தாரா... தீவிர விசாரணை

ABOUT THE AUTHOR

...view details