தமிழ்நாடு

tamil nadu

பெரம்பலூர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுப்பு : பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

By

Published : Mar 1, 2022, 3:42 PM IST

பெரம்பலூர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுப்பு பொதுமக்கள்  சாலை மறியல் போராட்டம்
பெரம்பலூர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுப்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

நோட்டீஸ் அடிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு காலை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் சுமார் 9 மணியளவில் ஜல்லிக்கட்டு பேரவையினரை, வரவழைத்த மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா அனுமதி மறுத்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

பெரம்பலூர்மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவக்குடி கிராமத்தில் இன்று காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டுப்பேரவையின் சார்பில் நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காகக் கடந்த 10 தினங்களாகத் தடுப்புகள் அமைத்து, பார்வையாளர்கள் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து, வாகனங்கள் வந்து செல்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளுடன் சுமார் ரூ.10 லட்சம் செலவில் வாடிவாசல் அமைக்கப்பட்டது.

மேலும் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன், மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் கதிரவன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

விசுவக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுப்பு

இதற்காக நோட்டீஸ் அடிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு காலை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருந்தன. இந்நிலையில் நேற்று இரவு சுமார் சுமார் 9 மணியளவில் ஜல்லிக்கட்டு பேரவையினரை, வரவழைத்த மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா அனுமதிமறுத்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

விசுவக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுப்பு

மேலும் இன்று காலை ஜல்லிக்கட்டு என்பதால் மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், விருதுநகர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் விழுப்புரம் போன்ற தொலைதூரங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் விசுவக்குடி ஜல்லிக்கட்டு விழாவிற்கு அதன் உரிமையாளர் வாகனங்களில் அழைத்து வந்து திரும்பிச்சென்றுவிட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட விசுவக்குடி பொதுமக்களும், ஜல்லிக்கட்டு பேரவையினரும் இன்று காலை விசுவக்குடி பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அவ்வழியே வந்த அரசு மற்றும் தனியார் வாகனங்கள் அணிவகுத்து நிற்கத்தொடங்கின. இதனால் பெரம்பலூர்- பிள்ளையார்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசாரும், வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: உயர்ந்த கொள்கைகளுக்காக ஸ்டாலின் தொடர்ந்து போராட வேண்டும்; கேரள முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details