தமிழ்நாடு

tamil nadu

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மனு

By

Published : Oct 29, 2020, 5:58 PM IST

பெரம்பலூர்: கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Broiler farmers petition
Broiler farmers petition

கறிக்கோழி வளர்ப்பு தொகை குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 12 வழங்க வேண்டும், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் 112 நபர்களுக்கு நபார்டு மானியம் வழங்கப்படவில்லை, அதை உடனடியாக பெற்றுத் தர வேண்டும், பாரபட்சமின்றி அனைத்து பண்ணைகளுக்கும் கோழிக்குஞ்சுகள் இறக்கப்படவேண்டும், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் பிரச்னை தீர்க்க மாதம் ஒருமுறை ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்த ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அருளானந்தம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

மேலும், தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற (5.11.2020) அன்று கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details