தமிழ்நாடு

tamil nadu

நாமக்கல்லில் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

By

Published : May 9, 2022, 5:00 PM IST

சேதமடைந்துள்ள அரசு கல்லூரி விடுதி மேற்கூரை மற்றும் கழிவறைகளை சீரமைத்து தர வலியுறுத்தி நாமக்கல்லில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.‌

நாமக்கல்லில் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்
நாமக்கல்லில் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

நாமக்கல்:நாமக்கல் மோகனூர் சாலையில் லத்துவாடி என்ற இடத்தில் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி அருகே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதி உள்ளது.

இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். தற்போது இந்த விடுதியின் மேற்கூரை மற்றும் கழிவறை உள்ளிட்டவை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோரிடம் மாணவர்கள் அமைப்பு சார்பில் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு மாணவ- மாணவிகள் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மரகதவல்லி, மோகனூர் வட்டாட்சியர் தங்கராசு மற்றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:வீடியோ: கஞ்சா பாய்ஸை ரவுண்டு கட்டிய லோக்கல் பாய்ஸ்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details