தமிழ்நாடு

tamil nadu

ராசிபுரம் அருகே காணாமல்போன நீட் தேர்வு எழுதிய மாணவி

By

Published : Sep 18, 2021, 2:09 PM IST

Updated : Sep 18, 2021, 3:45 PM IST

girl-student-missing-near-rasipuram-for-neet-exam-fear

ராசிபுரம் அருகே காணாமல்போன நீட் தேர்வு எழுதிய மாணவியை டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை காவலர்கள் தேடிவருகின்றனர்.

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள சின்னஅரியாகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் செந்தில்பாண்டியன் (40). அரசு மதுபானக்கடையில் உதவி விற்பனையாளராக பணியாற்றும் இவருக்கு தங்கம் என்ற மனைவியும், சுவேதா (17) என்ற மகளும், சரண்(16) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் தேர்வினை எழுதிய சுவேதாக காணாமல் போயுள்ளார்.

இது குறித்து, நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் செந்தில்பாண்டியன் புகார் அளித்துள்ளார்.

அதில், 2019-20ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தனது மகள் நீட் தேர்வு எழுதிவிட்டு நேற்று தேர்வு வினாவை வைத்துக்கொண்டு அதற்கான விடையை (ஆன்சர் கீ) செல்போனில் பார்த்துக்கொண்டிருந்தார் என்றும் அன்று காலை 10.40 மணி போல், இயற்கை உபாதை கழிக்கச் செல்வதாக தன்னிடம் கூறிவிட்டச் சென்றவர் வெகுநேரமாகியும் வீடுதிரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மாணவி காணாமல் போனது தொடர்பாக நாமகிரிப்பேட்டை காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ராசிபுரம் டிஎஸ்பி, செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து மாணவியை தேடிவருகின்றனர்.

நீட் தேர்வு வினாத்தாளை வைத்து மதிப்பெண் கணக்கிட்ட மாணவி காணாமால் போயிருக்கும் நிலையில், மதிப்பெண் குறைவாக வந்துள்ளது என நினைத்து பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் காணாமல் போய்விட்டாரா இல்லை வேறு ஏதேனும் விவகாரமா என காவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:திருச்சி என்ஐடி மூலம் ஜே.இ.இ. மெயின் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்

Last Updated :Sep 18, 2021, 3:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details