தமிழ்நாடு

tamil nadu

எருமப்பட்டி ஏறுதழுவதல்- அத்துமீறிய காளைகளை அடக்கிய காளையர்கள்!

By

Published : Feb 16, 2021, 3:32 PM IST

நாமக்கல்: எருமப்பட்டியில் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகளும் 300 காளையர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

எருமப்பட்டி ஏறுதழுவதல் போட்டி
எருமப்பட்டி ஏறுதழுவதல் போட்டி

நாமக்கல்லை அடுத்த எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியை நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி சின்ராஜ், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

எருமப்பட்டி ஏறுதழுவதல் போட்டி

இதில் நாமக்கல், மதுரை, கரூர், சேலம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600 காளைகளும் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு பிடித்து வருகின்றனர்.

சீறிப்பாயும் காளைகளை பிடிக்கும் காளையர்கள்

போட்டியில் அத்துமீறும் காளைகளுக்கும் அவற்றை அடக்கும் காளையர்களுக்கும் சில்வர் பாத்திரம், அரிசி மூட்டைகள், டேபிள் சேர், கட்டில், தங்கம், வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

அத்துமீறும் காளைகள்.. அடக்கி ஆளும் காளையர்கள்..

மேலும் பாதுகாப்பு பணியில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கும் மாடுகளுக்கும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க;ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பி.ஆர்.!

ABOUT THE AUTHOR

...view details