தமிழ்நாடு

tamil nadu

தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று நாமக்கல் +2 மாணவர் சாதனை

By

Published : Jun 20, 2022, 6:39 PM IST

மாணவர் ஸ்ரீராம்

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்திலேயே தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று நாமக்கல் மாணவர் சாதனை படைத்துள்ளார்.

நாமக்கல்: குமாரபாளையம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கணித அறிவியல் பாடத்தில் தமிழ் வழியில் படித்துள்ளார்.

இவர் கடந்த மாதம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார். இன்று தமிழ்நாடு அரசால் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண் பட்டியலில் இவர் மாநிலத்திலேயே தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

மாணவர் ஸ்ரீராம்

இவரை பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர். இது குறித்து மாணவர் கூறுகையில், தனது பெற்றோரும் பள்ளியில் தமிழ் வழி ஆசிரியர் தமிழ்செல்வி ஆகியோர் ஊக்குவித்தது காரணமாகவே தமிழ் பாடப்பிரிவில் அதிக மதிப்பெண் பெற்றதாகவும் தான் கால்நடை மருத்துவராக பணிபுரிய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் சதம் அடித்த மாணவி!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details