தமிழ்நாடு

tamil nadu

சீர்காழி ரேணுகாதேவி அம்மன் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு!

By

Published : Dec 6, 2022, 9:54 AM IST

சீர்காழி அருகே உள்ள ரேணுகாதேவி அம்மன் கோயிலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

சீர்காழி ரேணுகாதேவி அம்மன் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு!
சீர்காழி ரேணுகாதேவி அம்மன் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு!

மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா வானகிரி மீனவ கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரேணுகாதேவி அம்மன் கோயில் உள்ளது. இங்கு முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று (டிச.5) சென்றுள்ளார். அவருக்கு கிராமத்தின் சார்பில் ஆரத்தி எடுத்து பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற துர்கா ஸ்டாலின், சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது இந்திய கடற்படை தாக்குதலில் படுகாயம் அடைந்த வீரவேல் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களுக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் எனற கோரிக்கை மனுவை அளித்தனர்.

சீர்காழி அருகே உள்ள ரேணுகாதேவி அம்மன் கோயிலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்

கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வானகிரியைச் சேர்ந்த மீனவர் பாஸ்கரின் விசைப்படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதற்கு அரசு உரிய இப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட துர்கா ஸ்டாலின், இம்மனுக்கள் தொடர்பாக முதலமைச்சரிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதையும் படிங்க:நம்ம ஊரு திருவிழா: பிரம்மாண்டமாக நடத்த திட்டம்

ABOUT THE AUTHOR

...view details