ETV Bharat / state

நம்ம ஊரு திருவிழா: பிரம்மாண்டமாக நடத்த திட்டம்

author img

By

Published : Dec 6, 2022, 9:20 AM IST

சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இடம் பெறும் வகையில் பிரம்மாண்ட கலை விழாக்கள் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்படவுள்ளது.

பிரம்மாண்ட கலை விழா
பிரம்மாண்ட கலை விழா

சென்னை: நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், கலை பண்பாட்டுத்துறை வழக்கும் “நம்ம ஊரு திருவிழா” 2022-2023 ஆம் நிதியாண்டில் சட்டமன்ற பேரவையின் மானியக் கோரிக்கையின் போது, கலை பண்பாட்டுத்துறை தொடர்பாக தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலை விழாவினை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி சென்னையிலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

நாட்டுப்புறக் கலை வடிவங்களை பொதுமக்களிடையேயும், உலகத் தமிழர்களிடையே கொண்டு செல்லும் நோக்கிலும், இன்றைய இளம் தலைமுறையினர் நாட்டுப்புறக் கலை வடிவங்களின் சிறப்பினை அறிந்து கொள்ளும் வகையிலும், நாட்டுப்புறக் கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இடம் பெறும் வகையில் பிரமாண்ட கலை விழாக்கள் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவினை குறுந்தகடு (CD) அல்லது பென் டிரைவ் (Pen Drive)-ல் பதிவு செய்து, கலை பண்பாட்டுத்துறையின் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு தங்கள் குழுவின் முழு விவரங்களோடு (பெயர், முகவரி, தொலைபேசி எண் உட்பட) பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தேர்வுக்குழுவால் தகுதியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெறவுள்ள ‘நம்ம ஊரு திருவிழா’வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கலைக்குழுக்கள் விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் தங்கள் குழுவின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் 5 நிமிட வீடியோவை பதிவு செய்து வரும் 13 ஆம் தேதிக்குள் கலை பண்பாட்டுத்துறையின் மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு குழுவில் இடம் பெற்ற கலைஞர்கள் வேறு எந்த குழுவிலும் பங்கேற்கக்கூடாது. மேலும் தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.