தமிழ்நாடு

tamil nadu

சாராயம் விற்ற கும்பலை அடித்து விரட்டிய சிங்கப் பெண்கள்

By

Published : Oct 13, 2021, 8:04 PM IST

நாகப்பட்டினம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த சாராயக் கடையை, சூறையாடிய பெண்கள் சாராயம் விற்றவர்களையும் அடித்து விரட்டினர்.

சாராய பாக்கெட்டுகளை வீசிய பெண்கள்
சாராய பாக்கெட்டுகளை வீசிய பெண்கள்

நாகப்பட்டினம்: செம்பியன்மாதேவி ஊராட்சி மூங்கில்குடி கிராமத்தில், புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டு, சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

சாராய விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பகுதி பெண்கள் இரு தினங்களுக்கு முன்பு நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து நாகை ஆட்சியர் அருண்தம்புராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகரிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனால், காவல் துறையினர் தரப்பில் இருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத்தெரிகிறது.

சாராய விற்பனை கும்பலை அடித்து விரட்டிய பெண்கள்

இதனால், ஆத்திரமடைந்த சிங்கப் பெண்கள் இன்று (அக்.13) பொதுமக்களுக்கு இடையூறு செய்துவந்த சாராய விற்பனை கும்பலை அடித்து விரட்டினர்.

சாராய பாக்கெட்டுகளை வீசிய பெண்கள்

அதோடு நிறுத்திவிடாமல் சாராய விற்பனை செய்த கும்பல் பதுக்கி வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளை அள்ளி சாலையில் வீசி எறிந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க:நாமக்கல்லில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை

ABOUT THE AUTHOR

...view details