தமிழ்நாடு

tamil nadu

'பெண்கள் அதிகமாக பணியாற்றும் இடங்களில் விசாகா கமிட்டி

By

Published : Dec 10, 2021, 10:41 AM IST

பெண்கள் அதிகமாக பணியாற்றும் இடங்களில் 30 நாள்களுக்குள் விசாகா கமிட்டி அமைக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தெரிவித்துள்ளார்.

பணியிடங்களில் விசாகா கமிட்டி
பணியிடங்களில் விசாகா கமிட்டி

மயிலாடுதுறை : பணியிடங்களில் விசாகா கமிட்டி அமைத்து செயல்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தலைமையில் நேற்று (டிச.9)நடைபெற்றது.

விழிப்புணர்வு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "பணியிடத்தில் பெண்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்காக 2013-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த கமிட்டி செயல்படாமல் இருந்ததால், அதனை முழுமையாகச் செயல்படுத்துவதற்காக தற்போது காவல்துறைக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்களில் விசாகா கமிட்டி விழிப்புணர்வு

கல்வி நிறுவனங்களிலும் பெண்கள்

அனைத்து வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களிலும், பெண்கள் அதிகமாக பணியாற்றும் இடங்களில் 30 நாள்களுக்குள் விசாகா கமிட்டி அமைக்கப்படும். கமிட்டியின் செயல்பாடுகள் அவ்வப்போது ஆய்வு செய்யப்படும். பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்பது தான் இக்கமிட்டியின் நோக்கம் ஆகும்.

பணியிடங்களில் விசாகா கமிட்டி விழிப்புணர்வு
பணியிடங்களில் விசாகா கமிட்டி விழிப்புணர்வு

வழக்குகள் அதிகமாக வருகிறது

மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 இடங்களிலிருந்து பெண்களுக்கு எதிரான வழக்குகள் அதிகமாக வருகிறது. அந்த பகுதிகளில் விசாகா கமிட்டியினர் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில், காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், மாவட்ட அரசு வழக்கறிஞர் ராமசேயோன், காவல் ஆய்வாளர்கள் செல்வம், சங்கீதா உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: HELICOPTER CRASH : 'பைலட் வருண் சிங்கை குணமடைந்தவுடன் நேரில் சென்று பார்க்கணும்' - மீட்டவர் உருக்கம்!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details