தமிழ்நாடு

tamil nadu

மல்லிப்பட்டினம் மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு

By

Published : Apr 2, 2022, 10:32 AM IST

கோடியக்கரையில் மல்லிப்பட்டினம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்கி, மீன்பிடிப் பொருள்களைப் பறித்துச் சென்றது தொடர்பாக இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மல்லிப்பட்டினம் மீனவர்களைத் தாக்கிய சம்பவம்: இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோர காவல் துறையினர் வழக்கு பதிவு Vedaranyam Coast Guard registers case against Sri Lankan Navy over attack on Mallipattinam fishermen
மல்லிப்பட்டினம் மீனவர்களைத் தாக்கிய சம்பவம்: இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோர காவல் துறையினர் வழக்கு பதிவு Vedaranyam Coast Guard registers case against Sri Lankan Navy over attack on Mallipattinam fishermen

நாகப்பட்டினம்:தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கோடியக்கரை கடலில் லெனின் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் ஆறுமுகம் சதீஷ் தமிழ்ச்செல்வம் ஆகியோர் கடந்த 29ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களைக் கம்பு, கட்டை கல் மற்றும் பூட்ஸ் காலால் தாக்கி அவர்கள் வைத்திருந்த 300 கிலோ வலை, டார்ச்லைட், போன்ற பொருள்களை பறித்துச் சென்றனர்.

இதனிடையே, இலங்கை கடற்படையினர் தாக்கியதில் காயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்படையினர் மீது ஆயுதங்களைப் பயன்படுத்தி வழிப்பறியில் ஈடுபட்டதாக நேற்று (ஏப்.1) வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மோசமடையும் இலங்கை பிரச்சனை: அதிபர் வீடு முற்றுகை - கொழும்பு நகரில் ஊரடங்கு

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details