தமிழ்நாடு

tamil nadu

'பல்லக்கை சுமப்பது எங்கள் சமய உரிமை' - தருமபுர ஆதீன மடத்தில் பல்லக்கு சுமப்பவர்கள் பேட்டி!

By

Published : May 6, 2022, 7:48 PM IST

’பல்லக்கை சுமப்பது எங்கள் சமய உரிமை’ - தருமபுர ஆதீன மடத்தில் பல்லக்கு சுமப்பவர்கள்
’பல்லக்கை சுமப்பது எங்கள் சமய உரிமை’ - தருமபுர ஆதீன மடத்தில் பல்லக்கு சுமப்பவர்கள் ()

தருமபுர ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்குவது எங்கள் சமய உரிமை என ஆதீன மடத்தில் பல்லக்கு சுமப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை: ”தருமபுரம் ஆதீனத்தில் ஆதீனகர்த்தரை சிவிகை பல்லக்கில் அமர்த்தி, சுமந்து வீதியுலா செல்வது, எங்கள் சமய உரிமை. அதனை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம்” என தருமபுர ஆதீன மடத்தில் பல்லக்கு சுமப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், என்றும் பல்லக்கை சுமப்பவரின் கருத்துகளை கேட்காமலேயே பல்லக்கு நிகழ்விற்குத் தடை விதித்துள்ளதாகவும் தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு சுமப்பவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனை வலியுறுத்தி தருமபுரம் ஆதீனத்தல் பல்லக்கு சுமக்கும் 72 பேர் சுயவிருப்பத்தின் பேரிலேயே பல்லக்கு சுமப்பதாக எழுதி, கையெழுத்திட்டு மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் வழங்கியுள்ளனர்

தருமபுரம் ஆதீனத் திருமடத்தைச்சுற்றியுள்ள தெருக்களில் வசிக்கும் 72 பேர் பரம்பரை பரம்பரையாக சிவிகை பல்லக்கு தூக்கி வருகின்றனர். இவர்களில் 4 பேர் 'கோடி நாட்டாமை' என அழைக்கப்படுகின்றனர். அவர்களது மேற்பார்வையில் தற்போது பல்லக்கு தூக்கும் இளைஞர்களில் பலர் கல்லூரிகளில் படிப்பவர்களாகவும், பட்டப்படிப்பை முடித்தவர்களாகவும் உள்ளனர்.

’பல்லக்கை சுமப்பது எங்கள் சமய உரிமை’ - தருமபுர ஆதீன மடத்தில் பல்லக்கு சுமப்பவர்கள்

தங்களுக்குக் கல்வி அறிவு கொடுத்தது தருமபுரம் ஆதீனம்தான் என்றும், தங்களுக்கு வீடு மற்றும் நிலம் ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் வழங்கியுள்ளதாகவும், தங்களில் யாரையும் கட்டாயப்படுத்தி பல்லக்கை சுமக்க சொல்லவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் பல்லக்கு சுமப்பது காலம் காலமாக உள்ள சமய உரிமை. அதனை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம். இவ்விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு, தடை விதிக்கப்பட்ட பல்லக்கு நிகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மாணவி சிந்து!

ABOUT THE AUTHOR

...view details