தமிழ்நாடு

tamil nadu

மயிலை: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஸ்டாலின் நேரில் ஆய்வு

By

Published : Nov 13, 2021, 5:25 PM IST

மயிலாடுதுறையில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக ஆய்வுசெய்து, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர்
தமிழ்நாடு முதலமைச்சர்

மயிலாடுதுறை:மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்தில்கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்தார். அதனைத் தொடர்ந்து, சீர்காழி தாலுகா புத்தூரில் மழைநீர் சூழ்ந்த சம்பா தாளடி பயிர்களைப் பார்வையிட்ட ஸ்டாலின் தொடர்ந்து தரங்கம்பாடி தாலுகா, கேசவன் பாளையம் சுனாமி குடியிருப்புப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

பொதுமக்கள் கோரிக்கை

பின்னர் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து 124 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஐந்து கிலோ அரிசி, 15 வகையான மளிகைப் பொருள்கள், உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் 38 வீடுகள் கட்டித்தர வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஸ்டாலின் நேரில் ஆய்வு

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 67 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா தாளடி பயிர்கள் நடவுசெய்யப்பட்டுள்ளன என்றும், அதில் ஏழாயிரம் ஹெக்டேரில் பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன என்றும் முதலமைச்சரிடம் மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்தார்.

விவசாயிகள் கோரிக்கை

இதனையடுத்து ஸ்டாலினிடம், வடிகால் வாய்க்கால்களைத் தூர்வாராததால் வெள்ள நீர் வடிய வழியின்றி 10 நாள்களுக்கு மேலாகப் பல்வேறு பகுதிகளில் பயிர்கள் அழுகிவிட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வில் அமைச்சர்கள் பெரியசாமி, கே.என். நேரு, மெய்யநாதன், எம்பி ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ராஜ்குமார் பாதிக்கப்பட்ட விவரங்களை ஸ்டாலினிடம் தெரிவித்தனர். நடவடிக்கை எடுப்பதாகப் பொதுமக்களிடம் கூறிய ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டம் கருங்கண்ணி அருந்தவம் புலம் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப் புறப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. ஏழு வீடுகள் முழுமையாகவும் 246 வீடுகள் பகுதியாகவும் கனமழை காரணமாகச் சேதமடைந்துள்ளன.

இதையும் படிங்க: உழவருக்கு உடனடி நிவாரணம் - ஸ்டாலின் உறுதி

ABOUT THE AUTHOR

...view details