தமிழ்நாடு

tamil nadu

தாமதமாக அறிவிக்கப்பட்ட விடுமுறையால் மாணவர்கள் அவதி

By

Published : Sep 1, 2022, 11:24 AM IST

கனமழையால் தாமதமாக அறிவிக்கப்பட்ட விடுமுறையால் மாணவர்கள் அவதி
கனமழையால் தாமதமாக அறிவிக்கப்பட்ட விடுமுறையால் மாணவர்கள் அவதி ()

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் தாமதமாக வெளியிட்டதால் மாணவர்கள் அவதியடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறையில் 35.40 மில்லி மீட்டர், தரங்கம்பாடியில் 11 மில்லி மீட்டர், சீர்காழி 63.8 மில்லி மீட்டர் கொள்ளிடம் 3.80 மில்லி மீட்டர், மணல்மேடு 24 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் லலிதா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார். இந்த விடுமுறை அறிவிப்பு காலை 8.15 மணிக்கு மேல் வந்துள்ளது. இதனிடையே ஏராளமான மாணவர்கள் மழையில் நனைந்த படி பள்ளிக்கு புறப்பட்டுவிட்டனர். அதன்பின் விடுமுறை அறிவிப்பை அறிந்து மீண்டும் வீடு திரும்பினர்.

தாமதமாக அறிவிக்கப்பட்ட விடுமுறையால் மாணவர்கள் அவதி

மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, மங்கைநல்லூர், மணல்மேடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை நகரப் பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரப்படாததால் சாலையில் வெள்ளம்போல் நீர் தேங்கி நிற்கிறது.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தின் மீது உரசிய அரசுப்பேருந்து... 8 மாத பெண் குழந்தை உயிரிழப்பு...

ABOUT THE AUTHOR

...view details