தமிழ்நாடு

tamil nadu

மயிலாடுதுறையில் பதுக்கி வைத்திருந்த 310 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

By

Published : Jan 31, 2023, 8:56 AM IST

மயிலாடுதுறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 310 மூட்டைகள் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தார்.

பதுக்கி வைத்திருந்த 310 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
பதுக்கி வைத்திருந்த 310 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் சத்தியசீலன். இவர் அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் மோகன்தாஸ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஸ்ரீராம் பெஸ்ட் பென்சிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அந்த இடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கஞ்சாநகரம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வருவாய் துறையினர் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அங்கு 310 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப் பிரிவு புலனாய்வு துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே தப்பியோடிய சத்தியசீலனை போலீசார் தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் உள்ள நுகர்வோர் வாணிபக் கழக கிடங்குக்கு கொண்டு செல்லப்படும் என வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

ABOUT THE AUTHOR

...view details