ETV Bharat / bharat

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

author img

By

Published : Jan 31, 2023, 7:00 AM IST

2022-2023ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 31) தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை 2 கட்டங்களாக நடைபெறுகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். முர்மு குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்ற உள்ளார்.

இந்த கூட்டத்துக்குப் பின் 2022-2023ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதன்பின் நாளை (பிப்ரவரி 1) பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படும். முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 13ஆம் தேதி நிறைவடைகிறது.

இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி நிறுவடைகிறது. இந்த கூட்டங்களில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும். இந்த பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்தார்.

அதனடிப்படையில் நேற்று (ஜனவரி 30) அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. உலகளாவிய மந்தநிலை, ஏற்றுமதி வீழ்ச்சி, நடப்புக் கணக்கு பற்றாக்குறை உள்ளிட்டவைக்கு மத்தியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க: தெலங்கானா பட்ஜெட் விவகாரம் : ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் கேசிஆர் இடையே உடன்பாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.