தமிழ்நாடு

tamil nadu

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 50 படுக்கைகள் வழங்கல்!

By

Published : Jun 13, 2021, 2:03 AM IST

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தனியார் விவசாய நிறுவனத்தின் சார்பில் 50 படுக்கைகள் வழங்கப்பட்டன.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 50 படுக்கைகள் வழங்கல்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 50 படுக்கைகள் வழங்கல்

நாடு முழுவதும் கரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி குறைந்து வருகின்றன.

இதனைப் போக்கும் வகையிலும், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், இந்தியாவின் முன்னணி விவசாய நிறுவனமான சின்ஜெண்டா என்ற தனியார் நிறுவனம் சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ் மருத்துவ படுக்கைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தர்மபுரி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை போன்ற மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 200 படுக்கைகள் வழங்க திட்டமிடப்பட்டன. அவ்வகையில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அந்நிறுவனத்தின் சரக மேலாளர் விக்னேஸ்வரன் சுமார் 5.5 லட்சம் மதிப்புடைய 50 படுக்கைகள், மெத்தைகள், தலையணைகள், படுக்கை விரிப்புகள் ஆகியவற்றை வழங்கினார்.

அதனை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார், மாவட்ட இணை இயக்குநர் மகேந்திரன் முன்னிலையில் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் வழங்கினார்.

இதையும் படிங்க:கடன் கேட்டு தொந்தரவு செய்தால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details