தமிழ்நாடு

tamil nadu

காவிரிப்படுகை ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் அனுமதி -மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம்

By

Published : Nov 20, 2020, 9:21 PM IST

நாகப்பட்டினம்: காவிரிப்படுகை ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி-க்கு மத்திய அரசு உரிமம் வழங்கியதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம்
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம்

இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த. ஜெயராமன் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நவம்பர் 17ஆம் தேதி காவிரிப்படுகையை ஒட்டிய கடற்கரை பகுதியில் புதுச்சேரியிலிருந்து கடலூர், நாகை மாவட்டம் மட்டுமில்லாமல் காரைக்கால் வரை, நான்காயிரத்து 64 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை ஆழ்கடல் பகுதியில் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பு காவிரிப்படுகை ஆழ்கடல் ஹைட்ரோகார்பன் திட்டத்தையும், தடையில்லா ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதையும் எதிர்த்து, ஜனவரி 27ஆம் தேதியன்று மயிலாடுதுறையில் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தியது. இதில் முதன்மை பங்குவகித்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனாலும், இத்திட்டத்தை மத்திய அரசு கைவிடாமல் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் வழங்கியுள்ளது. தொடர்ந்து பிப்ரவரி 21ஆம் தேதி காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம்

அச்சட்டத்தையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல் காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு ஓஎன்ஜிசிக்கு உரிமம் வழங்கியுள்ளதை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் பேராபத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படும்" என்றார்.

இதையும் படிங்க:திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்த சூரசம்ஹாரம்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details