தமிழ்நாடு

tamil nadu

மக்களிடம் மாட்டிய போலி போலீஸ்... வைரலாகும் வீடியோ...!

By

Published : Apr 29, 2020, 3:20 PM IST

நாகை: மயிலாடுதுறை அருகே காவலர் எனக்கூறி வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் வசூல் செய்த இளைஞர்களைப் பிடித்த மக்கள், காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

people-handed-over-the-fake-police-to-the-real-police
people-handed-over-the-fake-police-to-the-real-police

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மல்லியம் ரயில் நிலையம் பகுதியில் இளைஞர் ஒருவர், தன்னை காவலர் எனக் கூறிக்கொண்டு இரண்டு பேரை மிரட்டி ரூ.500 வசூலித்துள்ளார்.

காவலர் ஒருவர் மப்டியில் மிரட்டி பணம் வசூலிக்கிறார் என்று கேள்விப்பட்ட ஆணைமேலகரம் ஊராட்சிமன்ற தலைவர் தேன்மொழி மற்றும் பொது மக்கள் ஒன்று திரண்டு சென்று அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளைஞர் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியைச் சேர்ந்த ஐய்யப்பன் மகன் ரஞ்சித்(22) என்பது தெரியவந்தது.

வைரலாகும் வீடியோ

இதையடுத்து குத்தாலம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குத்தாலம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மல்லியம் வந்த காவலர்கள், ரஞ்சித்தின் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து கைது செய்தனர், இதனிடையே ரஞ்சித்தை குத்தாலம் காவல் துறையினர் அடித்து அழைத்துச் செல்லும் காட்சிகள் வாட்ஸப்பில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:'இஸ்லாமியர்களிடம் வாங்க வேண்டாம்' - பாஜக எம்எல்ஏவின் சர்ச்சைப் பேச்சுக்கு ஜே.பி. நட்டா கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details