மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேற்று (ஜூன் 12) மாலை திடீரென பலத்தக் காற்று வீசியது. பின்னர், சிறிது நேரம் மழை பெய்தது.
இந்நிலையில், சீர்காழி நகராட்சிக்கு உள்பட்ட குமரன் கோயில் தெருவில் நூறு ஆண்டுகள் பழையான அரசமரத்தின் மிகப்பெரிய கிளை முறிந்து, அருகிலிருந்த வீடுகள் மேல் விழுந்தது.
இதில், அப்பகுதியில் வசித்து வந்த வாசுகி (45), கௌசல்யா (25), சுசிலா (60), துரை (40) ஆகியோரின் குடிசை, தகரவீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இதில், வீட்டிலிருந்த கௌசல்யா மற்றும் அவரது குழந்தைகள் விஜய் (4), நிசாந்த் (3), சுசிலா ஆகிய நான்குபேர் காயமடைந்தனர்.
இது குறித்து, தகவலறிந்த சீர்காழி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு வீடுகளின் மீது விழுந்த மரத்தினை இயந்திரம் மூலம் வெட்டி அகற்றினர். சீர்காழி வட்டாசியர் சண்முகம், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மக்களிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, மின்வாரியத்தினர் விரைந்து சென்று அப்பகுதியில் மின் இணைப்புகளை துண்டித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: குறைந்துவரும் கொரோனா தொற்று; 27ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நலம்!