தமிழ்நாடு

tamil nadu

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு!

By

Published : Apr 20, 2020, 4:21 PM IST

நாகை: சீர்காழி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

கூலி தொழிலாளி இளங்கோவன்
கூலி தொழிலாளி இளங்கோவன்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி இளங்கோவன் (55 வயது). இவர் அதே பகுதியில் உள்ள வாழை தோப்பில் காவலாளியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் மாடுகளுக்காக வாழைத் தோப்பில் புல் அறுத்து கொண்டிருந்தபோது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பி மீது மிதித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தினர் இளங்கோவனை காணவில்லையென தேடி சென்றபோது வாழைத் தோப்பில் அறுந்து கிடந்த மின் கம்பியை பிடித்தவாறு இறந்து கிடந்துள்ளார்.

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு

அதன் பின்னர் அவரது உறவினர்கள் மின் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு இளங்கோவனை அங்கிருந்து மீட்டுள்ளனர்.

இதுகுறித்து திருவெண்காடு காவல் துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர், இளங்கோவனின் உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:ஊரடங்கினால் மீண்டும் தலைதூக்கும் சட்டவிரோத மது விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details