தமிழ்நாடு

tamil nadu

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவி - நலம் விசாரித்த ஆட்சியர்

By

Published : Mar 9, 2022, 11:38 AM IST

உக்ரைன் நாட்டில் இருந்து வீடு திரும்பிய மாணவியை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து நலம் விசாரித்தார்.

உக்ரைனில் இருந்து வீடு திரும்பிய மாணவி
உக்ரைனில் இருந்து வீடு திரும்பிய மாணவி

நாகப்பட்டினம்:உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவி லின்சியா நேற்று (மார்ச் 08) மாலை தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவரை மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதேபோல் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மாணவி லின்சியாவை வீட்டில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து நலம் விசாரித்தார். அப்போது பேசிய மாணவி உக்ரைனில் இருந்து நாடு திரும்ப உதவிய பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.

உக்ரைனில் இருந்து வீடு திரும்பிய மாணவி

மேலும் மீண்டும் உக்ரைன் நாட்டில் சென்று படிக்க முடியாத சூழ்நிலை இருப்பதை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு தங்களுக்கு இந்தியாவில் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:உக்ரைன் போர் - ரயிலில் இந்தியர்களுக்கு அனுமதி மறுப்பு... கத்தியை காட்டி மிரட்டிய மாணவர்கள்...

ABOUT THE AUTHOR

...view details