தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பருவ குழந்தைகளுக்கான பொதுத்தேர்வு என்பது பாறாங்கல்லை தூக்கி போடுவதற்கு சமம் - தமிமுன் அன்சாரி பேட்டி

நாகப்பட்டினம்: ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்த போது...

By

Published : Sep 14, 2019, 8:56 PM IST

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முதல் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். இதை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

அப்போது பேசிய அவர், ”ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைமுறைக்கு கொண்டு வருவது குழந்தைகள் மீது பாறாங்கல்லை தூக்கி போடுவதற்கு சமம். இது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும், குலக் கல்வித் திட்டத்தையும் மறைமுகமாக செயல்படுத்தும் திட்டமாக இருக்கிறது. இதுகுறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்” என்றார்.

மேலும், இந்தியா முழுவதும் ஒரே மொழிதான் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் ட்விட்டர் பதிவு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தி மொழியை திணிக்க முயற்சித்தால் தமிழகத்தில் தன்னிச்சையாகவே இரண்டாம் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்கும் என்றார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details