தமிழ்நாடு

tamil nadu

மயிலையில் ஒருவர் சந்தேக மரணம்: இறந்தவரின் மகனிடம் தீவிர விசாரணை

By

Published : Nov 22, 2021, 9:31 AM IST

பொறையாறு அருகே தலையில் காயங்களுடன் கூலித்தொழிலாளி சந்தேகக்திற்கிடமான முறையில் இறந்ததால், அவரது மகனிடம் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

தலையில் காயங்களுடன் கூலித்தொழிலாளி
தலையில் காயங்களுடன் கூலித்தொழிலாளி

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா, பொறையாறு மரகதம் காலனியைச் சேர்ந்தவர் வேளாண் கூலித்தொழிலாளி பாலு (65). இவருக்கு இந்திரா என்ற மனைவியும், காளிமுத்து (28) என்ற மகனும் உள்ளனர்.

காளிமுத்து சென்னையிலுள்ள காலணி விற்பனை கடையில் பணியாற்றிவருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி ஊருக்கு வந்துள்ளார். பாலு நாள்தோரும் மது அருந்திவிட்டு வந்து தெரு மக்களிடமும், குடும்பத்தினரிடம் தகராறு செய்துவந்துள்ளார்.

அதேபோல நேற்று முந்தினம்(நவம்பர் 20) இரவு பாலு குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். நேற்று (நவம்பர் 21) காலை தலையில் பலத்த காயங்களுடன் பாலு சந்தேகக்திற்கிடமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த பொறையாறு காவல் துறையினர் பாலுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பொறையாறு கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் அளித்த புகாரின்பேரில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: Trichy SSI Murder: எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கு - நால்வர் கைது

ABOUT THE AUTHOR

...view details