தமிழ்நாடு

tamil nadu

மகாளய அமாவாசை: நாளை கடற்கரையில் பொதுமக்கள்கூட மயிலாடுதுறை ஆட்சியர் தடை

By

Published : Oct 5, 2021, 3:45 PM IST

மகாளய அமாவாசையன்று கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடைவிதித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மகாளய அமாவாசை: கடற்கரையில் பொதுமக்கள்கூட மயிலாடுதுறை ஆட்சியர் தடை
மகாளய அமாவாசை: கடற்கரையில் பொதுமக்கள்கூட மயிலாடுதுறை ஆட்சியர் தடை

மயிலாடுதுறை:இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'மயிலாடுதுறை மாவட்டத்தில் மகாளய அமாவாசை தினத்தன்று (அக்.6) பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரைகளில் மூதாதையர்களுக்குத் திதி செலுத்துவது பல்வேறு தரப்பினரின் நம்பிக்கை.

இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவு கூடும்பட்சத்தில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளான சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் கடற்கரை மற்றும் தரங்கம்பாடி கடற்கரைகளில் புதன்கிழமை (அக்.6) அன்று முழுவதும் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

மேலும் அன்றைய தினம் மாவட்டத்தின் எந்த கடற்கரைப் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் கூடக்கூடாது' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details