தமிழ்நாடு

tamil nadu

மழை நிவாரணம் ரூ.3000 வழங்குக! - விவசாயிகள் சாலைமறியல்

By

Published : Nov 26, 2022, 4:50 PM IST

தரங்கம்பாடி உள்ளிட்ட தாலுகா விவசாயிகளுக்கு மழை நிவாரணம் வழங்க வலியுறுத்தி சீர்காழியில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat

மயிலாடுதுறை : சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில், விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று (நவ.26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கவேண்டும், வேலை இழந்த விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 வழங்கவேண்டும், பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 வழங்கவேண்டும், பாதிக்கப்பட்ட அனைத்து விளைநிலங்களுக்கும் பயிர் காப்பீட்டு தொகையை 100% முழுமையாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மழை நிவாரணம் ரூ.3000 வழங்குக! - சீர்காழி விவசாயிகள் சாலைமறியல்

இதனைத்தொடர்ந்து, முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்ற விவசாயிகள், சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என அறிவித்து இரண்டு மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சீர்காழி நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: வேலூரில் கடை ஒதுக்கீட்டில் முறைகேடு - திமுக பிரமுகர்கள் தான் காரணம்?

ABOUT THE AUTHOR

...view details