ETV Bharat / state

வேலூரில் கடை ஒதுக்கீட்டில் முறைகேடு - திமுக பிரமுகர்கள் தான் காரணம்?

author img

By

Published : Nov 26, 2022, 3:36 PM IST

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் கடை ஒதுக்கீடு குலுக்கலில் முறைகேடு ஏற்பட்டதற்கு, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும், கவுன்சிலர்களும் தான் காரணம் என மாநகராட்சி அதிகாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Etv Bharat
Etv Bharat

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கிழ் 52 கோடி ரூபாயில் வேலூர் புதிய பேருந்து நிலையத்தை முழுமையாக இடிந்துவிட்டு புதுபிக்கப்பட்டது. புதுபிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் 85 கடைகள் கட்டப்பட்டு ஏலம் விடுவதில் அரசியல் ரீதியாக பல பிரச்சனைகளை மாநகராட்சி நிர்வாகம் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால், 3 முறை ஏலம் விட முடியாமல் பொது ஏலம் தள்ளிப் போய் கடைகள் ஏலம் விட முடியாமல் கிடப்பில் இருக்கிறது. , இதற்கு முன்னதாக பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்த வியாபாரிகள் வழக்கு தொடர்ந்த நிலையில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.அதில் பனீர்செல்வம், உசேனி, செளந்தர் ஆகிய வியபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மாநகராட்சி 4ஆவது மண்டலத்தில் முன்னுரிமை அளிக்கப்பட 3 வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்குவதுக்கு குலுக்கல் நடைபெற்றது. இதில், 3 பேரும் குலுக்கலில் கடைகள் தேர்வு செய்தனர். ஆனால், 3 பேருக்கும் பேருந்து நிலைய மேல் தளத்திலேயே 41, 42, 49 ஆகிய கடைகளின் எண் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் அந்த குலுக்கல் பெட்டியில் அனைத்து கடைகளின் விவரங்களும் சீட்டில் எழுதிப் போடவில்லை என்றும் மேல் தளத்தில் உள்ள கடைகள் விவரம் மட்டுமே குலுக்கல் சீட்டில் எழுதி போட்டுள்ளதாகவும் இந்த குலுக்கல் முறைகேடாக நடந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடை ஒதுக்கீட்டில் முறைகேடு

இதனால், அதிகாரிகளுக்கும், 3 வியபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் குலுக்கல் முறையில் முறைகேடு நடந்திருப்பதாக காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் மனு அளித்தனர். ஆனால் அங்கு புகார் பெறதா நிலையில் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், “ உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்து முன்னுரிமை பெற்று வந்தோம். மேல் தள கடைக்கு ரூ.5 லட்சம் டெபாசிட் கட்ட வேண்டும். தரை தளத்துக்கு ரூ.10 லட்சம் கட்ட வேண்டும். நாங்கள் ரூ.10 லட்சத்துக்கு டெபாசிட் தொகை கட்டிவிட்டோம். ஆனால், வேண்டும் என்றே குலுக்கல் பெட்டியில் மேல் தளத்திலுள்ள கடைகளுக்கான எண்ணை மட்டுமே போட்டிருக்க வேண்டும்.

பெட்டியை திறந்து மற்ற சீட்டுகளை காட்டுங்கள் என்றால் காட்ட மறுத்து விட்டு, குலுக்கல் முடிந்தது, முடிந்ததுதான் என்று கூறிவிட்டு அதிகாரிகள் சென்று விட்டனர். குலுக்களில் உதவி ஆணையர் இருக்க வேண்டும் ஆனால் அவர் வரவில்லை. உதவி வருவாய் அலுவலர்களான குமரவேல், தனசேகர் ஆகியோர் தான் பங்கேற்றனர். எங்களுக்கு கடைகள் ஒதுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அதிகாரிகள் இவ்வாறு செய்கிறார்கள்” என குற்றம் சாட்டினர்.

இது குறித்து நமது செய்தியாளர் விசாரித்த போது, புதிய பேருந்து நிலைய கடைகள் ஏலம் விடுவதில் அதிகாரிகளுக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதற்கொண்டு மாநகராட்சி கவுன்சிலர்கள் வரை தரைதள கடைகள் கேட்டு அழுத்தம் கொடுப்பதாகவும், உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளின் கவுன்சிலர்களும் தலா 1 கடைகள் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

இதனாலேயே 3 முறை ஏலம் தள்ளி போனதாகவும், மேலும் உயர் நீதிமன்றம் மூலம் முன்னுரிமை பெற்ற வியாபாரிகளுக்கு மேல் தளத்தில் கடைகள் ஒதுக்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்ததால் வேறு வழியின்றி சிக்கல்களில் சிக்கிக்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் அவஸ்தை படுவதாக மாநகராட்சி அதிகாரிகளே சிலர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: வரி ஏய்ப்பு புகார்; பருப்பு குடோவுனில் விடிய விடிய சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.