தமிழ்நாடு

tamil nadu

ஆய்வுக்கு வந்த மத்திய குழு - ஹிந்தியில் புகார் அளித்த விவசாயிகள்

By

Published : Nov 23, 2021, 8:06 PM IST

மத்திய குழுவிடம் புகார் அளித்த விவசாயிகள்
மத்திய குழுவிடம் புகார் அளித்த விவசாயிகள் ()

வேளாண்துறை அலுவலர்கள் உரிய கணக்கெடுப்பு நடத்தாமல் காப்பீட்டு நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வுக்கு வந்த மத்திய குழுவினரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஒன்றிய இணை செயலர் ராஜு ஷர்மா தலைமையில் நான்கு பேர் அடங்கிய ஒரு குழுவினர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று (நவ.23) வருகை தந்தனர்.

முதலில் சீர்காழி தாலுகாவிலுள்ள புத்தூர் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

ஹிந்தியில் புகார் அளித்த விவசாயிகள்

அப்போது, அங்கிருந்த விவசாயிகள் தங்களுக்கு நேர்ந்த பாதிப்புகள் குறித்து ஹிந்தியில் புகார் அளித்தனர். அப்போது, வேளாண்துறை அலுவலர்கள் உரிய கணக்கெடுப்பு நடத்தாமல் காப்பீட்டு நிறுவனத்திற்கு புரோக்கர் போல செயல்படுவதாக தெரிவித்தனர்.

மத்திய குழுவிடம் புகார் அளித்த விவசாயிகள்

இதனையடுத்து அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதத்தில் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க:Case filed against Tribes: பாம்புடன் வந்து முதலமைச்சருக்கு நன்றி சொன்ன பழங்குடிகள் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details