தமிழ்நாடு

tamil nadu

ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு பூம்புகார் காவிரி சங்கமத்தில் குவிந்த பக்தர்கள்!

By

Published : Aug 3, 2022, 7:56 PM IST

ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு பூம்புகார்  காவிரி சங்கமத்தில் குவிந்த பக்தர்கள்
ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு பூம்புகார் காவிரி சங்கமத்தில் குவிந்த பக்தர்கள் ()

ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு பூம்புகார் காவிரி சங்கமத்தில் பக்தர்கள் குவிந்தனர். இதில் புதுமணத்தம்பதிகள் பலர் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

காவிரி நதி பாயும் அனைத்து ஊர்களிலும் ஆடிப்பெருக்கு உற்சவம் இன்று(ஆகஸ்ட்.03) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி அன்னையை வரவேற்று விவசாயம் செழிக்கவும் வாழ்வு வளம் பெற்று நலமுடன் வாழவும் பொதுமக்களால் ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு பூம்புகார் காவிரி சங்கமத்தில் குவிந்த பக்தர்கள்!

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த பூம்புகார் கடலில் காவிரி சங்கமத்தில் ஆடிப்பெருக்கு விழா அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

கருகமணி, விளாம்பழம், பேரிக்காய் உள்ளிட்டப்பழ வகைகள் மற்றும் பச்சரிசி ஆகியவற்றை வைத்து காவிரித் தாய்க்கு பெண்கள் படையலிட்டு வழிபட்டனர்.

ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றைக்கழுத்தில் அணிவித்துக்கொண்டனர். புதிதாக திருமணமான புதுமணத் தம்பதியினர் ஏராளமானோர் படையல் இட்டு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையும் படிங்க:ஆடிப்பெருக்கையொட்டி பட்டீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்..!

ABOUT THE AUTHOR

...view details