நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு பெண் காவலர், இரண்டு ஆண் காவலர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் நேற்று(ஆகஸ்ட் 5) காவல் துறை ஆய்வாளர் சிங்காரவேலுவுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அவர் தன்னைத்தானே வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். காவல் நிலைய அறைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
காவல் ஆய்வாளருக்குக் கரோனா - மருத்துவர் உயிரிழப்பு
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை காவல் ஆய்வாளருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
மயிலாடுதுறையில் பிரபல குழந்தைகள் நல மருத்துவர் அரையபுரத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 4) உயிரிழந்துள்ளார்.
மயிலாடுதுறை பகுதியில் கரோனா தொற்று சமூகப் பரவலாகி வருகிறது. அரசு அலுவலகங்களிலும் தொற்று ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 6) நாகை மாவட்டத்தில் 52 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில், 27 பேர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.