தமிழ்நாடு

tamil nadu

மோடியின் திட்டத்தால் விவசாயிகள் தற்கொலை தடுக்கப்பட்டுள்ளது!

By

Published : Dec 21, 2020, 11:08 PM IST

நாகப்பட்டினம்: மோடியின் திட்டங்களால் விவசாயிகள் தற்கொலை தமிழ்நாட்டில் தடுக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

l.murugan
l.murugan

தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து மாநிலம் முழுவதும் விவசாயிகளிடம் பரப்புரை செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், பூவைதேடி, கொள்ளிடம் பகுதிகளிடம் சென்ற எல்.முருகன், அப்பகுதி விவசாயிகளிடம் வேளாண் சட்டம் குறித்து கலந்துரையாடினார்.

முன்னதாக மருதூர் வடக்கு கிராமத்தில் பாஜக விவசாயிகளிடம் பேசிய முருகன், "2014ஆம் ஆண்டுக்கு பிறகு பிரதமர் மோடி கொண்டு வந்த 6 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களால் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை.

கிசான் அட்டை வழங்கப்பட்டதால் இனி கூட்டுறவுச் சங்கத்திலோ, கந்து வட்டிக்கோ விவசாயிகள் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. இடதுசாரிகளும், திமுகவும் விவசாயிகளுக்கு நல்லது நினைக்கவில்லை" என்றார்.

இதையும் படிங்க:பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details