மதுரை மாவட்ட புறநகர்ப் பகுதிகளான நாகமலை புதுக்கோட்டை, அலங்காநல்லூர், செக்கானூரணி, சோழவந்தான், திருமங்கலம், வாடிப்பட்டி, சமயநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் ஆடுகள் திருடு போவதாக நிறைய புகார்கள் வந்த வண்ணமே இருந்துள்ளன. இதனைத் தடுக்க சமயநல்லூர் டிஎஸ்பி ஆரோக்கிய ஆனந்த்ராஜ் தலைமையில் சார்பு ஆய்வாளர் கோபிநாத் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு ஆடுகளைத் திருடுபவர்களைக் கண்காணித்தனர்.
ஆடுகள் ஜாக்கிரதை - ஆட்டுத் திருட்டில் மேலும் இருவர் கைது
மதுரை: நாகமலை புதுக்கோட்டை பகுதியில் ஆடுகளைத் திருடிய வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர் 200க்கும் மேற்பட்ட ஆடுகளைத் திருடிய ராக்கெட் ஜெயபால் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரும் அவர் கூட்டாளியான அப்பள பாண்டியனும் காவலாளியைக் கொலை செய்தது மற்றும் ஆடுகளைத் திருடியவர்கள் பற்றி தெரியவந்தது. அவர் அளித்த தகவலின்படி, மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், சுரேஷ் ஆகிய இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
காட்டிக்கொடுத்த டேப்... மாட்டிக்கொண்ட கொலையாளிகள் - காவலாளி கொலையில் துப்பு துலங்கியது எப்படி?
இவர்கள் அனைவரும் தினமும் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆடுகளை திருடுவதையே தொழிலாகக் கொண்டுள்ளவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து 10 ஆடுகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.