தமிழ்நாடு

tamil nadu

பாம்பன் பாலம் வழியே டிச.25ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து

By

Published : Dec 24, 2022, 9:52 AM IST

பாம்பன் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் டிசம்பர் 25ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பாம்பன் பாலத்தின் வழியே டிச.25 வரை ரயில் சேவை ரத்து!
பாம்பன் பாலத்தின் வழியே டிச.25 வரை ரயில் சேவை ரத்து!

மதுரை: பாம்பன் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து டிசம்பர் 23, 24 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்) மற்றும் டிசம்பர் 24, 25 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்) ராமேஸ்வரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

டிசம்பர் 24 மற்றும் 25ஆம் தேதி அன்று திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி மற்றும் அனைத்து மதுரை - ராமேஸ்வரம் - மதுரை விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் இதே காலத்தில் புறப்பட வேண்டிய, வருகை தர வேண்டிய வாராந்திர விரைவு ரயில்களும் ராமேஸ்வரம் - மண்டபம் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ராமேஸ்வரம் - ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சேவை ரயில் மட்டும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் உதவி மையம் 9360548465 என்ற அலைபேசி எண் உடனும், மண்டபம் ரயில் நிலையத்தில் உதவி மையம் 9360544307 என்ற அலைபேசி எண் உடனும் செயல்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சபரிமலை பக்தர்கள் வாகனம் விபத்து.. கேரளாவில் தமிழர்கள் 8 பேர் உயிரிழப்பு..

ABOUT THE AUTHOR

...view details