தமிழ்நாடு

tamil nadu

Arikomban elephant:'அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் விடப்படும்' - உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்

By

Published : Jun 5, 2023, 3:49 PM IST

Updated : Jun 6, 2023, 7:45 AM IST

Etv Bharat
Etv Bharat

அரிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட சேதங்களை கணக்கீட்டு வருவதாகவும், அரிக்கொம்பன் யானையை களக்காடு முண்டந்துறை அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிலளித்துள்ளது.

Arikomban elephant: மதுரை: தேனியைச் சேர்ந்த கோபால் என்பவர் அரிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட சேதத்திற்கு நிவாரணம் வழங்கவும், யானையை கேரளா அரசிடம் ஒப்படைக்கவும், கேரளா அரசு ஏற்க மறுக்கும் பட்சத்தில் வனவிலங்கு சட்டத்தின்படி மனித உயிர் மற்றும் பொருள்களுக்கு ஆபத்தை விளைவிப்பதால் யானையை வேட்டையாட உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், 'கடந்த 27.04.2023 முதல் கேரளா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த அரிக்கொம்பன் என்ற யானை கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றி வருகிறது. கேரளா உயர்நீதிமன்றம் அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அதன் மூலம் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள கேரளா வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அரிக்கொம்பன் யானையினால் தமிழ்நாட்டிலுள்ள கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய பொருட்கள் மற்றும் மனிதர்கள் தாக்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க:Arikomban Elephant: ஆட்டம் காட்டிய அரிக்கொம்பனை பிடித்த வனத்துறை.. கம்பத்தில் 144 தடை நீக்கம்!

எனவே, தேனி வன அலுவலர் குழு ஒன்றை ஏற்படுத்தி யானையினால் ஏற்பட்ட சேதத்தை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கவும், அரிக்கொம்பன் யானையை பிடித்து கேரளா அரசிடம் ஒப்படைக்கவும்; மீண்டும் அரிக்கொம்பன் யானை தமிழ்நாட்டிற்கு வர விடாத வண்ணம் கேரளா அரசு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். கேரளா அரசு இதனை ஏற்க மறுக்கும் பட்சத்தில் வனவிலங்கு சட்டத்தின்படி மனித உயிர் மற்றும் பொருள்களுக்கு ஆபத்தை விளைவிப்பதால் யானையை வேட்டையாட உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு இன்று (ஜூன் 5) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், 'அரிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட சேதம் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது என்றும் அத்துடன், அரிக்கொம்பன் யானையை களக்காடு முண்டந்துறை அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது' என தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:Arikomban: முடிவுக்கு வந்த அரிக்கொம்பனின் ஆட்டம்.. 10 நாட்கள் வேட்டையின் முழு விபரம்!

Last Updated :Jun 6, 2023, 7:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details