தமிழ்நாடு

tamil nadu

அரசு மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் - நீதிமன்றத்தின் நூதன தண்டனை!

By

Published : Dec 15, 2022, 6:35 PM IST

புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில், 2 லட்சம் ரூபாயை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் - நீதிமன்றத்தின் நூதன தண்டனை!
அரசு மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் - நீதிமன்றத்தின் நூதன தண்டனை!

மதுரையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (டிச.15) நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “மனுதாரர் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மனுதாரர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். எனவே சிறையில் இருக்கும் காலத்தினை கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

இதனையடுத்து அரசு தரப்பில், “மனுதாரர் ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஆகவே அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது” என தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, “இந்த வழக்கில் தொடர்புடைய மனுதாரர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 2 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும்.

மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் காலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது. சாட்சிகளை கலைக்கவோ, தலைமறைவாகவோ முயற்சிக்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:நீதிபதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ரூ.50 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details