ETV Bharat / state

நீதிபதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ரூ.50 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி

author img

By

Published : Dec 12, 2022, 6:07 PM IST

குடும்ப நல நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி
நீதிபதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி

சென்னை: துன்புறுத்தல் உள்ளிட்ட காரணங்களைக் கூறி மனைவியிடம் இருந்து விவாகரத்துகோரி கணவர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி கணவர் தரப்பில் 2017இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என 2017 ஜனவரியில் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், 2017ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை என 2021இல் சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கணவர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஓராண்டுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில் காலதாமதமாகவும், 2021 ஆகஸ்டில் புதிதாக நீதிபதியாக பொறுப்பேற்றவருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகக் கூறி, அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், கணவர் தரப்புக்கு 50 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்த நீதிபதி, இரு வாரங்களில் அத்தொகையை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். உத்தரவு பிறப்பித்த ஆண்டை சரி பார்க்காமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட்ட உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மெரினாவில் நகைக்காக பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிய கும்பல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.