தமிழ்நாடு

tamil nadu

அருமனை ஸ்டீபன் வழக்கு...ஜார்ஜ் பொன்னையா வழக்குடன் இணைப்பு

By

Published : Sep 16, 2021, 5:50 AM IST

அரசியல் தலைவர்களை விமர்சித்து பேசிய விவகாரத்தில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அருமனை ஸ்டீபன் தொடர்ந்த வழக்கை, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்குடன் சேர்த்து பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசை விமர்சித்த விவகாரம்: மற்றொரு வழக்குடன் இணைத்து உத்தரவு!
அரசை விமர்சித்த விவகாரம்: மற்றொரு வழக்குடன் இணைத்து உத்தரவு!

மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், "உயிரிழந்த சமூக ஆர்வலர் ஸ்டேன்ஸ் ஸ்வாமியின் நினைவஞ்சலி கூட்டம் கடந்த ஜூலை 18ஆம் தேதி அருமனை பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் நான் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், அரசுகளுக்கும் எதிராக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற கூட்டமானது, முறையாக காவல் ஆணையரின் அனுமதி பெற்றே நடைபெற்றது. சட்டவிரோதமாக கூட்டம் நடைபெறவில்லை. மேலும், இந்த வழக்கு உள்நோக்கத்துடன் பதியப்பட்டுள்ளது. ஆகையால், என் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று (செப்.15) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கினை, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்குடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:10.5% வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details