தமிழ்நாடு

tamil nadu

அதிமுக தலைமையில் தான் கூட்டணி - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

By

Published : Aug 8, 2022, 8:05 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அச்சம்பத்து - புதுக்குளம் பகுதியில் தொகுதி மேம்பாடு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜு பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை ஏற்கும், அதில் மாற்றமில்லை. அதிமுக தலைமையின் கீழ் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். மக்களை ஏமாற்றும் நோக்கில் பல பொய்யான தேர்தல் அறிவிப்புகளை வழங்கி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.

திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். நிதி அமைச்சர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டுகிறார். நிதி அமைச்சரை முதலில் மதுரை முழுவதும் ஆய்வு செய்ய சொல்லுங்கள். கமிஷன் பெறுவதற்காக மாநகராட்சி பணிகளை நிதி அமைச்சர் நிறுத்தி வைப்பதாக திமுகவினரே குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்" என்றார்

இதையும் படிங்க:'இந்தியா முதல் இடத்திற்கு வர வேண்டும்' - செஸ் வீராங்கனை சிகப்பி

ABOUT THE AUTHOR

...view details