தமிழ்நாடு

tamil nadu

palamedu jallikattu:ஆஸ்திரேலியாவில் இருந்து ஜல்லிக்கட்டு பார்க்க வந்த 87 வயது தாத்தா

By

Published : Jan 16, 2023, 7:50 PM IST

palamedu jallikattu: பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை கண்டு களிப்பதற்காகவே ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த 87 வயது முதியவர் ரோமன் அலங்கராவின் செயல் பலரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டு...ஆஸ்திரேலியாவில் இருந்து பார்க்க வந்த முதியவர்
பாலமேடு ஜல்லிக்கட்டு...ஆஸ்திரேலியாவில் இருந்து பார்க்க வந்த முதியவர்

பாலமேடு ஜல்லிக்கட்டு...ஆஸ்திரேலியாவில் இருந்து பார்க்க வந்த முதியவர்

palamedu jallikattu:மதுரை மாவட்டத்தில்பாலமேட்டில் இன்று(ஜன.16) ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ரோமன் அலங்கரா என்ற 87 வயது முதியவர் பாலமேடு ஜல்லிக்கட்டைக் காண்பதற்காக வருகை தந்திருந்தார்.

அப்போது பேசிய முதியவர் ரோமன் அலங்கரா, 'மிக துணிச்சலுடன் இளைஞர்கள் காளைகளை எதிர்கொள்ளும் இந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பொதுவாகவே தமிழ்நாட்டு கிராம மக்கள் மீது அன்பும் பற்றும் உண்டு. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டைக் காண வந்திருந்தேன்.

கண்டிப்பாக இந்த முறையும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இன்று காலை பாலமேடு ஜல்லிக்கட்டினைக் காண வந்தேன். மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உள்ளது. இந்த கலாசாரத் திருவிழாவின் மீது நான் மிகுந்த மதிப்பு கொண்டுள்ளேன்' என்றார்.

தள்ளாத வயதிலும் தமிழர்களின் பாரம்பரியத்தைக் காண ஆஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த ரோமன் அலங்கரா பார்வையாளர்களிடம் பெரும் வியப்பை ஏற்படுத்திவிட்டார் என்பதே உண்மை.

இதையும் படிங்க:தமிழகத்தில் நடப்பது விளம்பர ஆட்சி - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details