தமிழ்நாடு

tamil nadu

ஈடிவி பாரத் ஊடகத்தில் பணியாற்ற தேர்வான மாணவர்கள் - காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு!

By

Published : Feb 10, 2023, 10:04 PM IST

ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் ஆசிரியர் குழுவில் கன்டென்ட் எடிட்டராக பணியாற்ற தேர்வு பெற்ற மாணவியருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

Etv Bharat
Etv Bharat

ஈடிவி பாரத் ஊடகத்தில் பணியாற்ற தேர்வான மாணவர்கள் - காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு!

மதுரை:ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடக கன்டென்ட் எடிட்டருக்கான தேர்வு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை மாணவ - மாணவியருக்கு கடந்த ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் அத்துறையின் இறுதி ஆண்டு பயிலும் ஆர்வமுள்ள மாணவ - மாணவியர் பலர் பங்கேற்றனர்.

தேர்வு எழுதிய மாணவ - மாணவியரில் திவ்யபாரதி, பிரதிபா கிருஷ்ணன், நீஜா உதயகுமார் ஆகியோருடன் அதே பல்கலைக்கழகத்தின் காட்சி தொடர்பியல் துறை மாணவர் பரசுராமனும் தேர்வுபெற்றார். முன்னதாக, இவர்கள் அனைவருக்கும் ஹைதராபாத்தில் இருந்து ஆசிரியர் குழு மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை ஆன்லைன் மூலமாக நேர்காணல் நடைபெற்றது.

அதில் தேர்வான அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில், அந்த ஆணைகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜா. குமார், மாணவ - மாணவியருக்கு வழங்கி தனது வாழ்த்தையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டார். இதழியல் துறையின் தலைவர் முனைவர் எஸ். ஜெனிபா, பேராசிரியர் எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு - சென்னை மேயர் பிரியா

ABOUT THE AUTHOR

...view details