ETV Bharat / state

கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு - சென்னை மேயர் பிரியா

author img

By

Published : Feb 8, 2023, 9:52 AM IST

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் கற்றல் அடைவுத் திறன் குறைவாக உள்ள மாணவர்களை சிறப்பு வகுப்புகள் நடத்தி தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மேயர் பிரியா அறிவுரை வழங்கியுள்ளார்.

மேயர் பிரியா
மேயர் பிரியா

சென்னை: சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாநகராட்சி பள்ளிகளில் 98,633 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். 2,962 ஆசியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் 32 மேல்நிலைப் பள்ளிகளில் 11,395 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த மேல்நிலைப் பள்ளிகளில் 229 முதுநிலை ஆசிரியர்கள் ஏற்கனவே பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது புதிதாகத் தமிழ் பாடப்பிரிவில் 12 ஆசிரியர்கள், தமிழ் பாடப்பிரிவில் 5 ஆசிரியர்கள், கணிதப் பாடப்பிரிவில் 4 ஆசிரியர்கள், இயற்பியல் பாடப்பிரிவில் 3 ஆசிரியர்கள், வேதியியல் பாடப்பிரிவில் 5 ஆசிரியர்கள், தாவரவியல் பாடப்பிரிவில் 4 ஆசிரியர்கள், விலங்கியல் பாடப்பிரிவில் 4 ஆசிரியர்கள், வணிகவியல் பாடப்பிரிவில் 2 ஆசிரியர்கள், பொருளாதார பாடப்பிரிவில் 6 ஆசிரியர்கள், வரலாறு பாடப்பிரிவில் 2 ஆசிரியர்கள், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 1 ஆசிரியர், மனையியல் பாடப்பிரிவில் 2 ஆசிரியர்கள், உடற்கல்வி பாடப்பிரிவில் 1 ஆசிரியர் என ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று (பிப்.7) பணிநியமன ஆணைகளை மேயர் பிரியா ராஜன் வழங்கினார்.

மேலும், மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் கற்றல் அடைவுத் திறன் குறைவாக உள்ள மாணவர்களைப் பாடப்பிரிவுகளின் அடிப்படையில் கண்டறிந்து, அவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தி தீவிரமாகக் கண்காணிக்கவும், அன்றைய பாடங்களை மாணவர்கள் ஆர்வமுடன் கற்கும் வகையில் நாள்தோறும் வீட்டுப்பாடம் வழங்கி கண்காணித்திடவும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு மேயர் பிரியா ராஜன் அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க: நீங்கள் மெதுவாக கற்கும் மாணவர்களா.? கவலை வேண்டாம்.. நீங்களும் 80 எடுக்கலாம்.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.