தமிழ்நாடு

tamil nadu

'ஆளுமைமிக்கத் தலைவர் முதலமைச்சர் எடப்பாடி' - செல்லூர் ராஜு பேச்சு

By

Published : Jan 18, 2020, 8:58 PM IST

மதுரை: ஆளுமை மிக்க தலைவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Minister Sellur Raju Speech Minister Sellur Raju Press Meet Minister Sellur K. Raju மதுரை செல்லூர் ராஜு பேச்சு செல்லூர் ராஜு பத்திரிக்கை சந்திப்பு செல்லூர் ராஜு மேடை பேச்சு
Minister Sellur Raju Speech

மதுரை திருமங்கலம் மெயின் ரோடு, ஜவகர்புரத்தில் பாண்டியன் நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது, அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ' பிரபல வானொலி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் ஆளுமை மிக்கத் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளதாக கூறியுள்ளனர். மக்களுக்காக மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்டதே கூட்டுறவுச் சங்கங்கள்.

திமுக காலத்தில் கூட்டுறவுத்துறை மிகப்பெரிய கடனில் மூழ்கி இருந்தது. ஆனால், தற்போது கணினி மயமாக்கப்பட்டு, சரியான அலுவலர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தத் துறையில் நான் பொறுப்பு ஏற்ற பிறகு 29 இடங்களில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

செல்லூர் ராஜு பேச்சு

இதன் மூலம் பல லட்சம் ரூபாய் வருமானம் அரசுக்கு கிடைக்கின்றது. மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 91 லட்சம் பயனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில், எனது பணியினை மிகவும் சிறப்பாக செய்து வருகிறேன்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

சிறுமியை வன்புணர்வு செய்ய முயன்ற இருவர் மீது பாய்ந்தது போக்சோ

Intro:கூட்டுறவுத்துறை அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது
அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சுBody:கூட்டுறவுத்துறை அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது
அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு


மதுரை திருமங்கலம் மெயின் ரோடு ஜவகர் புரத்தில் பாண்டியன் நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையம் அமைச்சர் செல்லூர் ராஜூ ,அமைச்சர்ஆர்.பிஉதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

*பின் மேடையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது*

வருவாய்த்துறை அமைச்சர் உள்ளத்தில் உள்ளதை மிக சரியாக கூறினார்.

FM ரேடியோவில் ஒரு ஆய்வில் ஆளுமை மிக்க தலைவராக தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என கூறியுள்ளனர்.

மக்களுக்காக மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்டதே கூட்டுறவுச் சங்கங்கள்.

தாய்க்கு தப்பாத பிள்ளையாக பிறந்து இருக்கிறேன்.

திமுக காலத்தில் கூட்டுறவுத்துறை மிகப் பெரிய கடனில் மூழ்கியது. தற்போது சரியான அதிகாரிகளைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

நான் பொறுப்பு ஏற்ற பிறகு 29 இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையம் தொடங்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.

91 லட்சம் பேர்களுக்கு வட்டியில்லா கடன் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருவருக்கு இந்தத் துறைகள் கிடைத்தது மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம்.

இந்த துறைகளில் சிறப்பாக தனது செயல்பாட்டினை செய்து வருகிறோம்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details