தமிழ்நாடு

tamil nadu

புதிய வருவாய் கோட்டாட்சியர்களுக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் குறித்து பயிற்சி அளிக்க உத்தரவு!

By

Published : Nov 2, 2022, 7:17 PM IST

புதிதாக நியமிக்கப்பட்ட அல்லது பதவி உயர்வு பெற்ற வருவாய்த்துறை கோட்டாட்சியர்களுக்கு, குற்றவியல் நடைமுறைச்சட்டம் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai-
madurai-

மதுரை: கரூர் மாவட்டம், குளித்தலையைச்சேர்ந்த வினோத் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் ஒரு ஆண்டுக்கு எந்த குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன் என குற்றவியல் நடைமுறைச்சட்டப்படி உறுதிமொழி பத்திரம் வழங்கினார்.

இதனிடையே கொலை வழக்கில் அவர் பல்லடத்தில் கைதானார். இதனால் அவர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் வழங்கிய உறுதிமொழி பத்திரத்தை ரத்து செய்து, சிறையில் அடைக்க குளித்தலை கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வினோத் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அளித்த தீர்ப்பில், "உறுதிமொழி பத்திரத்தை ரத்து செய்த வருவாய் கோட்டாட்சியர், அண்மையில் வருவாய் கோட்ட அலுவலராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் இதற்கு முன்பு இதுபோன்ற விசாரணையை நடத்தவில்லை. மிக முக்கியமாக, நீதிமன்றம் வகுத்துள்ள கோட்பாடுகள் மற்றும் பிரிவு 122 (1) (b) Cr.P.Cஇன்கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையின் தன்மை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை.

கோட்டாட்சியர்களின் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலான காலம், மிகவும் சாதாரணமான முறையில், மிக முக்கியமாக தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதிக்கிறது. புதிதாக நியமிக்கப்பட்ட அல்லது பதவி உயர்வு பெற்ற வருவாய்த்துறையில் உள்ள கோட்டாட்சியர்களுக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் குறித்து பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்" எனத்தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:உளவுத்துறை அறிக்கையினை பரிசீலித்தபின்னரே ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details